19.1.11

ஸ்ரீபுரம் பொற்கோயில் இது வேலூர் அருகேயிருக்கும் தங்ககோயில்

ஸ்ரீபுரம் பொற்கோயில் அழகான அருமையான தங்கக்கோயில்

ஸ்ரீபுரம் பொற்கோயிலின் தல வரலாறு:

                  வேலூரைச் சேர்ந்தவர் நந்தகோபால்.  அவரது மனைவியின் பெயர்  - ஜோதியம்மாள். இவர்களது 2வது பையன் பெயர்தான் சதீஷ். இந்த பையன் 3-1- 1976 ல் பிறந்தான். 8-5- 1992ல் அதாவது 16வது வயதில் இந்தபையன் திருமலைக்கோடி கிராமம் சென்றார். அங்கு போய் புற்றுக்கு பூஜை நடத்தினார். 11-09-1993ல் 7 கன்னிப்பெண்கள் முன்பு வைக்கப்பட்ட 7  புனித குடங்களுக்கு அவர் பூஜை செய்து வழிபட்டார்.  அப்போது 7 -வது கன்னிப்பெண்ணின் குடத்துக்கு பூஜை செய்து மஞ்சள் நீரைக் கீழே கொட்டியபோது  பூமியிலிருந்து ஒரு லிங்க வடிவில் சுயம்பு மேலே வந்தது.  அந்த இடத்தில் ஸ்ரீநாராயணி கோயிலை எழுப்பி வழிபாடு செய்தார். இக்கோயிலுக்கு 9-01 -2000ல் குடமுழுக்கு நடந்தது.

                    அதுக்கு அப்புறம் அந்தக்கோயிலுக்கு அருகிலேயே லட்சுமி, சரஸ்வதி, துர்கை ஆகிய மூன்று தேவியரின் சங்கமமான ஸ்ரீலட்சுமி நாராயணியை உருவாக்கி  பிரதிஷ்டை செய்தார். இந்த கோயிலுக்கு 29-1-2001 ல் குடமுழுக்கு நடந்தது. 2007ல் கோயில் முழுவதும் தங்கத் தகடுகளால் வேயும் பணி நடந்து முடிந்தது. ஸ்ரீசக்கர வடிவத்தில் ஆலயத்தின் சுற்று பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபமும், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சியும், திறந்தவெளி கலையரங்கமும், புல்வெளியும், நீரூற்றுகளும், பூங்காக்களும் இங்கு உள்ளன. இந்த கோயிலில் உலகின் மிகப் பெரிய வீணையும்,  10008 திருவிளக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும்.
மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி . அந்த மகாலட்சுமிக்கு   வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்க கவசம், தங்க கிரீடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் மகாலட்சுமி அருள் செய்கிறாள்.

                    பொற்கோயிலின் எதிரே ரோட்டைக் கடந்து போனால் ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், அதை ஒட்டிய கற்கோயிலில் மற்றொரு நாராயணியும் அருள் பாலிக்கின்றனர். இந்தக் கோயிலை நாராயணி பீடம் என்று சொல்கிறார்கள். இஙகு வரும் பக்தர்களுக்கு மதியமும், இரவும் உணவு வழங்கப்படுகிறது. சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கிறார்கள்தலவிருட்சம் வன்னிமரமாகும்.

தங்கக் கோயில் உருவாக்கப்பட்டதன் காரணம் என்ன?
                    மக்கள் அனைவரும் எளிதில் கோயிலுக்கு வருவதில்லை. மேலும் ஆன்மிக கருத்துக்களை சொன்னாலும் மக்கள் விரும்பி கேட்பதும்மில்லை. அதனால்தான் இந்த பிரமாண்டமான தங்கக்கோயிலை கட்டியிருக்கிறார்கள். இப்படி கட்டியதால் இந்தக்கோயிலை பார்க்க மக்கள் வருவார்கள்.  இந்த கோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதோடு  உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்து செல்வார்கள் என்ற நோக்கத்துடன் இந்த கோயிலை கட்டியிருக்கிறார்கள்.

தங்க கோயிலின் சிறப்பம்சம் என்னன்ன?
                    இந்த கோயிலை கட்ட 350கோடி ரூபாய் செலவானதாக சொல்லப்படுகிறது. 1500கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது என்றும் 5000ம் சதுரடி பரப்பளவுக்கு தங்கக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.   கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரே செயற்கை நீர் ஊற்றுக்களும் உள்ளது.

                    மண்டபத்துக்கு பின்னால் மனிதனுடைய 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் போவதை உணர்த்தக்கூடிய வகையில் 18 நுழைவு வாயில்களை அமைத்துள்ளனர். இந்த கோயில் 100 ஏக்கர் பரப்பளவிள் உள்ளது. ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் இந்த லட்சுமிநாராயணி கோயில்  உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில் வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்படி கோயிலை அமைத்துள்ளனர்.

                    இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன  10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய  விளக்கு உள்ளது. கோயிலை சுற்றிலும்  புல்வெளியும், அதன் நடுவே சுதையால் ஆன துர்க்கையும், லட்சுமியும், சரஸ்வதியும், மாரியம்மன் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குளே செயற்கையான மலைகளும் , குளங்களும், நீர்வீழ்ச்சிகளும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. நவீன விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  இவைகள் இரவை பகல் போல மாற்றுகின்றன. கோயிலுக்குளே ஏராளமான மரங்கள் பச்சைப்பசேல் என்று  அருமையாக காட்சியளிக்கின்றன.

                    பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக செல்போன் மற்றும் கேமரா ஆகியனவும், லக்கேஜ்ம், மற்ற பொருட்களையும் வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்று போர்டு வைத்துள்ளனர்.  கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள அனைத்து பகுதிகளும் இயற்கை எழில் சூழ மிக அருமையாக அமைந்துள்ளது.

தினசரி சிறப்பு பூஜைகள்: ஸ்ரீசக்தி அம்மா தினசரி 9 மணி நேரம் பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இதுதவிர ஆகம முறைப்படி காலை 5 மணி முதல் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி இலவசம். மற்றும் சிறப்பு அனுமதியும் உண்டு

வழிபாட்டு முறைகள்: சைவமும்- வைஷ்ணவமும் கலந்த வழிபாட்டு முறை.

திருவிழாக்கள்: பெளர்ணமியன்று பூஜைகள், வருடப்பிறப்பு விழா, ஸ்ரீசக்தி அம்மா பிறந்தநாள் விழா,  சரஸ்வதி யாகம்,  தமிழ்ப் புத்தாண்டு விழா, மே 8ல் சக்தி அம்மா ஞானம் பெற்ற தின விழா, வரலட்சுமி பூஜை,  ஸ்ரீபுரம் ஆண்டு விழா, நவராத்திரி விழா, தீபாவளி சிறப்பு வழிபாடு முதலியன.

அலங்காரம்: அமாவாசையன்று முத்தங்கி அலங்காரம், பௌர்மணியன்று தங்கக் கவச அலங்காரம், ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று பெருமாள் நாமம் அலங்காரம் நடைபெறும்.
திங்கள்கிழமை - ஸ்ரீநாராயணி.
செவ்வாய்க்கிழமை - கருமாரி.
புதன்கிழமை - நாராயணி
வியாழக்கிழமை - சரஸ்வதி
வெள்ளிக்கிழமை - மகாலட்சுமி
சனிக்கிழமை - நாராயணி
ஞாயிற்றுக்கிழமை - துர்க்கையம்மன்
கோயிலுக்கு செல்லும் வழி காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கும், ஸ்ரீபுரத்துக்கும் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் சென்றுவருகின்றன. புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இந்தக்கோயில் அமைந்துள்ளது.

நாராயணி பீடமே இங்கு விடுதிகளை அமைத்து பராமரித்து வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். தொலைபேசி எண்.0416-2206500. இதை தவர வேலூரிலும் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன.

 ஸ்ரீநாராயணி கோயிலையும் ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயிலையும்  ஸ்ரீநாராயணி பீடமே பராமரித்து வருகிறது. 0416-2271202, 2271844. தொலைநகல் 0416 2271777  email amma1976@md5.vsnl.net.in website: www.sripuram.org www.narayanipeedam.org.

இக்கோயிலில் வழிபட்ட பெரியோர்கள் மற்றும் பிரபலமானவர்கள்: முன்னால் குடியரசு  தலைவர் அப்துல் கலாம், முன்னால் பிரதமர் தேவெகௌடா, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக வின்முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு, ராஜீவ் காந்தி மகள் பிரியங்கா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் பெரியோர்களும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.

ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு போவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன்ன?
                   ஸ்ரீபுரத்திற்குள் சென்று வருவதால் அங்குள்ள இயற்கை சூழ்நிலைகள் மனதிற்கும் உடலிற்கும் புத்துணர்ச்சியை தருகிறது. மந்திரசப்தமும் பக்தி கீதங்களும் மனதுக்கு அமைதியையும், ஆனந்த்தையும் தருகிறது. ஸ்ரீமகாலட்சுமி தரிசனம் கிடைக்கும். ஸ்ரீசக்தியம்மாவின் நல்லாசி கிடைக்கும். இங்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீமகாலட்சுமிக்கு அபிஷகம் செய்த தீர்த்தம் பிரசாதமாக கிடைக்கும்.  ஸ்ரீமகாலட்சுமி பாதத்தில் வைக்கப்பட்ட ஸ்ரீசடாரியை பக்தர்களின் தலையில் வைத்து ஆசிபெறும் பாக்கியம் கிடைக்கும்.  மொத்த்தில் நம் வாழ்வில் துன்பம் நீங்கி சந்தோஷமும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

ஆன்மிகம்

1. திருநாகேஸ்வரம் நாகநாதர் ஆலயம்
2. கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் ஆலயம்



இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: