அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள், லவன், குசன் என்னும் 2 மகன்களை பெற்றெடுத்தாள். ராமர் தனது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர்.
இந்நேரத்தில் ராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற லவகுசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும் ராமபிரான் மீது கோபமடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர்.
அப்போது ஒரு யாகக் குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப்போட்டனர். குதிரையுடன் வந்த சத்ருக்கன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத்தேடி ராமனும் அங்கு வந்தார். இதையறிந்த வால்மீகி லவகுசர்களிடம், ராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களது அன்னையே சீதை என்பதையும், எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமபிரான் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கி கூறினார். இருப்பினும், தந்தையை எதிர்த்தால் லவகுசருக்கு பித்ரு தோஷம் பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம் நீங்கப்பெற்றனர்.
குறுங்காலீஸ்வரர்: முற்காலத்தில் இத்தலத்து சிவலிங்கம், மணலால் மூடப்பட்டது. சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு "குறுங்காலீஸ்வரர்' என்ற பெயர் உண்டானது. "குசலவம்' என்றால் "குள்ளம்' என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.
சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருப்பதால், அம்பிகைக்கு மவுசு அதிகம். அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள்.
சூரியபகவான் சிறப்பு: அம்பாள் சன்னதிக்கு முன்புறம் உள்ள நவக்கிரக சன்னதி தாமரைபீடத்தின் மீது அமைந்துள்ளது. நடுவில் சூரியன், உஷா, பிரத்யுஷாவுடன் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரின் மீது நிற்கிறார். தேரோட்டியான அருணன் ஏழு குதிரைகளையும் பிடித்தபடி, சாரதியாக இருக்கிறார். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சூரியன், தனது தேரில் பயணிக்கும் நாளைக் கணக்கில் வைத்தே ஒவ்வொரு வருடமும் கணக்கிடப்படுகிறது. புத்தாண்டு மற்றும் பொங்கல் பிறக்கும் வேளையில் சூரியபகவானை ரதத்தின் மீது, அதுவும் மனைவியருடன் இந்த கோலத்தில் தரிசனம் செய்வது விசேஷம். சித்திரை மாதம் ரதசப்தமியின் போதும் இவருக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.
நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, ரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம்.
சிறப்பம்சம்: இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப் பணம் செய்யலாம். கோபுரத் திற்கு கீழே கபால பைரவர், வீரபத்திரர் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக் கிறது. லவகுசர்கள் "கோ' எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, "அயம்' என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் "கோயம் பேடு' என பெயர் பெற்றது. "பேடு' என்றால் "வேலி' எனப் பொருள். அருணகிரியார் இத்தலத்து முருகனைத் திருப்புகழில் பாடும் போது "கோசைநகர்' என்று குறிப்பிட்டுள்ளார்
.
மூலவர்- குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர்,அம்மன் தர்மசம்வர்த்தினி,தீர்த்தம் - குசலவ தீர்த்தம்,
திருவிழா: மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ரதசப்தமி
திறக்கும் நேரம்: காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
முகவரி: அருள்மிகு குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில் , கோயம்பேடு- சென்னை.600107.
மேலும் கோயம்பேடு சம்பந்தப்பட்ட சில வெப்சைடுகளின் குறிப்புகள் கீழே
veg price wholesale rate சந்தை நிலவரம் கோயம்பேடு மார்கெட் விலை பட்டியல் காய்கறி சந்தை நிலவரம்
chennai online news vegetable price in chennai koyambedu market
கோயம்பேடு காய்கறி விலை நிலவரம்
சென்னை புறநகர் பேருந்து நிலையம் (கோயம்பேடு) Chennai Mofussil Bus Terminus (CMBT) (Chennai) Main Bus stand of Chennai at Koyembedu. It is ASIA'S Largest Bus Terminus
கோயம்பேடு மார்க்கெட் அவலம்
http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=12389&id1=9
கோயம்பேடு காய்கறி விலை - Hughpages.com
http://hotnews.hughpages.com/tell_67725_id_7565.php
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1182:q----------&catid=36:2007
கோயம்பேடு பேருந்து நிலையம் – அரசின் கவனத்திற்கு
http://nilathuli.wordpress.com/2010/06/23/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/
கோயம்பேடு மார்க்கெட் ரூ.100 கோடி வியாபாரம்
http://www.dinamalar.com/News_Detail.asp?id=108713
"சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!''— புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம்

பஸ் டிரைவர் மீது தாக்குதல்: கோயம்பேட்டில் வாகனங்கள் ஸ்தம்பிப்பு
http://dhinamalar.info/News_Detail.asp?Id=78888&Print=1
குப்பைகளால் நாற்றமெடுக்கும் கோயம்பேடு பொதுமக்கள் வணிகர்கள் தினமும் தவிப்பு
http://article.wn.com/view/WNAT16a3e97f72fd0acf27f248fc78c6f00c/
kpn1049@yahoo.in
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments:
Post a Comment