Showing posts with label anmeekam. Show all posts
Showing posts with label anmeekam. Show all posts

19.1.11

ஸ்ரீபுரம் பொற்கோயில் இது வேலூர் அருகேயிருக்கும் தங்ககோயில்

ஸ்ரீபுரம் பொற்கோயில் அழகான அருமையான தங்கக்கோயில்

ஸ்ரீபுரம் பொற்கோயிலின் தல வரலாறு:

                  வேலூரைச் சேர்ந்தவர் நந்தகோபால்.  அவரது மனைவியின் பெயர்  - ஜோதியம்மாள். இவர்களது 2வது பையன் பெயர்தான் சதீஷ். இந்த பையன் 3-1- 1976 ல் பிறந்தான். 8-5- 1992ல் அதாவது 16வது வயதில் இந்தபையன் திருமலைக்கோடி கிராமம் சென்றார். அங்கு போய் புற்றுக்கு பூஜை நடத்தினார். 11-09-1993ல் 7 கன்னிப்பெண்கள் முன்பு வைக்கப்பட்ட 7  புனித குடங்களுக்கு அவர் பூஜை செய்து வழிபட்டார்.  அப்போது 7 -வது கன்னிப்பெண்ணின் குடத்துக்கு பூஜை செய்து மஞ்சள் நீரைக் கீழே கொட்டியபோது  பூமியிலிருந்து ஒரு லிங்க வடிவில் சுயம்பு மேலே வந்தது.  அந்த இடத்தில் ஸ்ரீநாராயணி கோயிலை எழுப்பி வழிபாடு செய்தார். இக்கோயிலுக்கு 9-01 -2000ல் குடமுழுக்கு நடந்தது.

                    அதுக்கு அப்புறம் அந்தக்கோயிலுக்கு அருகிலேயே லட்சுமி, சரஸ்வதி, துர்கை ஆகிய மூன்று தேவியரின் சங்கமமான ஸ்ரீலட்சுமி நாராயணியை உருவாக்கி  பிரதிஷ்டை செய்தார். இந்த கோயிலுக்கு 29-1-2001 ல் குடமுழுக்கு நடந்தது. 2007ல் கோயில் முழுவதும் தங்கத் தகடுகளால் வேயும் பணி நடந்து முடிந்தது. ஸ்ரீசக்கர வடிவத்தில் ஆலயத்தின் சுற்று பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபமும், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சியும், திறந்தவெளி கலையரங்கமும், புல்வெளியும், நீரூற்றுகளும், பூங்காக்களும் இங்கு உள்ளன. இந்த கோயிலில் உலகின் மிகப் பெரிய வீணையும்,  10008 திருவிளக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும்.
மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி . அந்த மகாலட்சுமிக்கு   வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்க கவசம், தங்க கிரீடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் மகாலட்சுமி அருள் செய்கிறாள்.

                    பொற்கோயிலின் எதிரே ரோட்டைக் கடந்து போனால் ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், அதை ஒட்டிய கற்கோயிலில் மற்றொரு நாராயணியும் அருள் பாலிக்கின்றனர். இந்தக் கோயிலை நாராயணி பீடம் என்று சொல்கிறார்கள். இஙகு வரும் பக்தர்களுக்கு மதியமும், இரவும் உணவு வழங்கப்படுகிறது. சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கிறார்கள்தலவிருட்சம் வன்னிமரமாகும்.

தங்கக் கோயில் உருவாக்கப்பட்டதன் காரணம் என்ன?
                    மக்கள் அனைவரும் எளிதில் கோயிலுக்கு வருவதில்லை. மேலும் ஆன்மிக கருத்துக்களை சொன்னாலும் மக்கள் விரும்பி கேட்பதும்மில்லை. அதனால்தான் இந்த பிரமாண்டமான தங்கக்கோயிலை கட்டியிருக்கிறார்கள். இப்படி கட்டியதால் இந்தக்கோயிலை பார்க்க மக்கள் வருவார்கள்.  இந்த கோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதோடு  உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்து செல்வார்கள் என்ற நோக்கத்துடன் இந்த கோயிலை கட்டியிருக்கிறார்கள்.

தங்க கோயிலின் சிறப்பம்சம் என்னன்ன?
                    இந்த கோயிலை கட்ட 350கோடி ரூபாய் செலவானதாக சொல்லப்படுகிறது. 1500கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது என்றும் 5000ம் சதுரடி பரப்பளவுக்கு தங்கக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.   கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரே செயற்கை நீர் ஊற்றுக்களும் உள்ளது.

                    மண்டபத்துக்கு பின்னால் மனிதனுடைய 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் போவதை உணர்த்தக்கூடிய வகையில் 18 நுழைவு வாயில்களை அமைத்துள்ளனர். இந்த கோயில் 100 ஏக்கர் பரப்பளவிள் உள்ளது. ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் இந்த லட்சுமிநாராயணி கோயில்  உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில் வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்படி கோயிலை அமைத்துள்ளனர்.

                    இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன  10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய  விளக்கு உள்ளது. கோயிலை சுற்றிலும்  புல்வெளியும், அதன் நடுவே சுதையால் ஆன துர்க்கையும், லட்சுமியும், சரஸ்வதியும், மாரியம்மன் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குளே செயற்கையான மலைகளும் , குளங்களும், நீர்வீழ்ச்சிகளும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. நவீன விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  இவைகள் இரவை பகல் போல மாற்றுகின்றன. கோயிலுக்குளே ஏராளமான மரங்கள் பச்சைப்பசேல் என்று  அருமையாக காட்சியளிக்கின்றன.

                    பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக செல்போன் மற்றும் கேமரா ஆகியனவும், லக்கேஜ்ம், மற்ற பொருட்களையும் வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்று போர்டு வைத்துள்ளனர்.  கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள அனைத்து பகுதிகளும் இயற்கை எழில் சூழ மிக அருமையாக அமைந்துள்ளது.

தினசரி சிறப்பு பூஜைகள்: ஸ்ரீசக்தி அம்மா தினசரி 9 மணி நேரம் பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இதுதவிர ஆகம முறைப்படி காலை 5 மணி முதல் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி இலவசம். மற்றும் சிறப்பு அனுமதியும் உண்டு

வழிபாட்டு முறைகள்: சைவமும்- வைஷ்ணவமும் கலந்த வழிபாட்டு முறை.

திருவிழாக்கள்: பெளர்ணமியன்று பூஜைகள், வருடப்பிறப்பு விழா, ஸ்ரீசக்தி அம்மா பிறந்தநாள் விழா,  சரஸ்வதி யாகம்,  தமிழ்ப் புத்தாண்டு விழா, மே 8ல் சக்தி அம்மா ஞானம் பெற்ற தின விழா, வரலட்சுமி பூஜை,  ஸ்ரீபுரம் ஆண்டு விழா, நவராத்திரி விழா, தீபாவளி சிறப்பு வழிபாடு முதலியன.

அலங்காரம்: அமாவாசையன்று முத்தங்கி அலங்காரம், பௌர்மணியன்று தங்கக் கவச அலங்காரம், ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று பெருமாள் நாமம் அலங்காரம் நடைபெறும்.
திங்கள்கிழமை - ஸ்ரீநாராயணி.
செவ்வாய்க்கிழமை - கருமாரி.
புதன்கிழமை - நாராயணி
வியாழக்கிழமை - சரஸ்வதி
வெள்ளிக்கிழமை - மகாலட்சுமி
சனிக்கிழமை - நாராயணி
ஞாயிற்றுக்கிழமை - துர்க்கையம்மன்
கோயிலுக்கு செல்லும் வழி காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கும், ஸ்ரீபுரத்துக்கும் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் சென்றுவருகின்றன. புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இந்தக்கோயில் அமைந்துள்ளது.

நாராயணி பீடமே இங்கு விடுதிகளை அமைத்து பராமரித்து வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். தொலைபேசி எண்.0416-2206500. இதை தவர வேலூரிலும் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன.

 ஸ்ரீநாராயணி கோயிலையும் ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயிலையும்  ஸ்ரீநாராயணி பீடமே பராமரித்து வருகிறது. 0416-2271202, 2271844. தொலைநகல் 0416 2271777  email amma1976@md5.vsnl.net.in website: www.sripuram.org www.narayanipeedam.org.

இக்கோயிலில் வழிபட்ட பெரியோர்கள் மற்றும் பிரபலமானவர்கள்: முன்னால் குடியரசு  தலைவர் அப்துல் கலாம், முன்னால் பிரதமர் தேவெகௌடா, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக வின்முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு, ராஜீவ் காந்தி மகள் பிரியங்கா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் பெரியோர்களும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.

ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு போவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன்ன?
                   ஸ்ரீபுரத்திற்குள் சென்று வருவதால் அங்குள்ள இயற்கை சூழ்நிலைகள் மனதிற்கும் உடலிற்கும் புத்துணர்ச்சியை தருகிறது. மந்திரசப்தமும் பக்தி கீதங்களும் மனதுக்கு அமைதியையும், ஆனந்த்தையும் தருகிறது. ஸ்ரீமகாலட்சுமி தரிசனம் கிடைக்கும். ஸ்ரீசக்தியம்மாவின் நல்லாசி கிடைக்கும். இங்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீமகாலட்சுமிக்கு அபிஷகம் செய்த தீர்த்தம் பிரசாதமாக கிடைக்கும்.  ஸ்ரீமகாலட்சுமி பாதத்தில் வைக்கப்பட்ட ஸ்ரீசடாரியை பக்தர்களின் தலையில் வைத்து ஆசிபெறும் பாக்கியம் கிடைக்கும்.  மொத்த்தில் நம் வாழ்வில் துன்பம் நீங்கி சந்தோஷமும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

ஆன்மிகம்

1. திருநாகேஸ்வரம் நாகநாதர் ஆலயம்
2. கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் ஆலயம்



இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

4.11.10

திருநாகேஸ்வரம் திருநாகேச்சுரம் தஞ்சாவூர் தமிழ்நாடு இந்தியா thirunageswaram tanjore tamilnadu india

மூலவர்: நாகேஸ்வரர், நாகநாதர், உற்சவர்:அம்மன்/தாயார்: பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி) , தல விருட்சம்:செண்பகம், தீர்த்தம்:சூரியதீர்த்தம் புராண பெயர்: திருநாகேச்சுரம், ஊர்:திருநாகேஸ்வரம்-612204 மாவட்டம்:தஞ்சாவூர், மாநிலம்:தமிழ்நாடு.காலை 6 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

                   சுசீலர் என்ற முனிவருக்கு சுகர்மன் என்ற மகன் இருந்தான். இநத சுகர்மன் வனத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது நாக அரசனான தக்ககன் (ராகு) என்ற பாம்பு தீண்டியது. இதனால் தன் மகனை தீண்டிய தக்ககன்(ராகு பாம்பு) மானிடனாக பிறக்கும்படி அந்த முனிவர் சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டார். பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து  வழிபடுங்கள் சாபம் போகும் என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன் சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர் பெற்றார். அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இன்னொரு சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் காட்சி தருகின்றனர். பிருங்கி முனிவருக்கு முத்தேவியரும் இப்படி காட்சி தந்தனர். மார்கழி மாதத்தில் இந்த மூன்று அம்பிகைக்களுக்கும் புனுகு சாத்துகின்றனர். அந்த சமயத்தில் 45 நாட்கள் இந்த அம்பிகைகளை தரிசிக்க முடியாது. இந்த 45 நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்பு இருக்கும் திரைச்சீலைக்கே பூஜை செய்கிறார்கள். தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன் மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கிறார்கள். இங்கு வந்து இந்த மூன்றுதேவியரை
வணங்கி, வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது காலகாலமாக இருந்து வரும் நம்பிக்கை.

                ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. . பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால் இந்த கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கினால் நல்ல யோகம், பதவி,பதவிஉயர்வு, தொழில், தொழில் மேண்மை வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை நீக்கம், நோய் நீக்கம், கடன் நீக்கம், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை தருவார். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்கு வந்து இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது.நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். பால் அபிஷேகத்தின்போது, பால் நீல நிறத்தில் மாறும் அதிசயம் இங்கு காணலாம். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் இவருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரியின் போது ராகு பகவான் சிவனை
வழிபட்டு அருள்பெற்றாராம். இந்த அடிப்படையில் இப்போதும் சிவராத்திரியின் போது, இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம் உள்ளது. சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின்போது மட்டும் ராகு பகவான் உற்சவர் வீதியுலா போகிறார்.

                   ராகுபெயர்ச்சியின் போது பரிகார பூஜை செய்து கொள்ளலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் ராகுபகவான், யோகராகு என்ற பெயரிலும் இருக்கின்றனர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்புகின்றனர்.

                    ராகு கிரகம்: அதிதேவதை - பசு, பிரத்யதி தேவதை - நாகம், நிறம் - கருமை, வாகனம் - சிம்மம், தானியம் - உளுந்து, மலர் - மந்தாரை, ரத்தினம் - கோமேதகம், வஸ்திரம் - நீலம், நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம், நட்புவீடு:- மிதுனம்- கன்னி- துலாம் இம்மூன்றும், பகைவீடு - கடகம்- சிம்மம்,ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம்.

                    பிரதான வாயில் கிழக்கு கோபுரம் - ஐந்து நிலைகளையுடையது. நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது.

                    சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் போக வேண்டி ராகுபகவான் இந்ததலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டார்.அதனால இத்தலத்து இறைவன் "நாகநாதர்' எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. இந்த தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் பலன்களளையும் தருவது சிறப்பு.

                   மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை.  கார்த்திகையில் பிரம்மோற்ஸவம், ராகு பெயர்ச்சி. ஞாயிறு தோறும் மாலை 4.30-6 மணி ராகு காலத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை, பாலபிஷேகம் நடக்கும். இது தவிர பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் நடக்கிறது.

                  கும்பகோணத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ரயில்நிலையம்: திருநாகேஸ்வரம், கும்பகோணம் (6 கிமீ)
விமான நிலையம்: திருச்சிராப்பள்ளி (110 கிமீ)

                   சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்ததும் ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றறதும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது

                    திருநாகேஸ்வரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் உப்பிலியப்பன் கோவில் என்கிற திவ்யதேசம் ஸ்தலம் உள்ளது.
Navagraha Temples
Suriyanar Koil (sun)
Arulmigu SivaSuriya Narayana Swamy Temple,
Suriyanar Kovil - 612102
Tamil Nadu, South India.
Phone : 0435 - 2472349
Email : info@suriyanarkoil.com
Web Site : www.suriyanarkoil.com   


Thingalur (chandran)
Arulmighu Kailasanathaswamy Temple,
Thingalure - 613204,
Thiruvaiyaru Taluk, Thanjavur District,
Tamil Nadu, South India.   
Thirunageswaram (raaghu)
Arulmighu Naganathaswamy Temple,
Tirunageswaram - 612204, Kumbakonam Taluk,Thanjavur District,
Tamil Nadu, South India.
Phone: 0435-2463354
Email : sriraaghutemple@sancharnet.in
Web Site : www.thirunageswaramraghu.org   


Alangudi (Guru)
Sri Abadhsahayeshwara Swamy Temple,
Alangudi - 61280, Valangaiman Taluk, Thiruvarur District,
Tamil Nadu, South India.
Phone : 04374-269407
Email : algguru@sancharnet.in
Web Site : www.alangudigurubaghavan.com   


Thirunallar (sani)
Sri Tharpaneeswarar Temple,
Thirunallar Post, Karaikal,
Pondicherry , South India.
Phone : 04368 - 236504
Email : algguru@sancharnet.in
Web Site : www.alangudigurubaghavan.com   

Kezhperumballam (kethu)
Arulmighu Naganathaswamy Temple,
Keela Perumpallam - 609105,
Tharangampadi Taluk, Nagai District,
Tamil Nadu, South India.   
Thiruvengadu (budhan)
Arulmigu Suveedharaneswarar Swamy Temple,
Thiruvengodu - 609 114,
Sirkali Taluk, Nagai District,
Tamil Nadu, South India.
Phone : 04364 - 256424   

Vaitheswaran koil (sevvai)
Arulmigu Vaithiyanatha Swamy Temple,
Vaitheswaran Kovil Post,
Serkali Taluk, Nagai District
Tamil Nadu, South India.
Phone : 04364 - 279423   

Kanjanur (velli)
Arulmigu Agneeswarar Temple,
Kanjanur Post, Thiruvidaimaruthur Taluk, Thanjavur District,
Tamil Nadu, South India.
Phone : 0435 - 2473737

related websites
Raghu Temple- Thirunageswaram -Online Pooja Booking  Raghu - Thirunageshwaram- Navagraha Temples

http://kumbakonamtemple.wordpress.com/2009/07/27/raghu-peyarchi-thirunageswaram-21st-august-2009online-pooja-booking/

    
Thirunageswaram (Rahu)
, Navagraha Sthalas
http://www.mustseeindia.com/Navagraha-Sthalas-Thirunageswaram-%28Rahu%29/attraction/14139

Sri Naganatha Swamy ,Thirunageswaram
http://shanmughavadivu-temple.blogspot.com/2008/06/6.html

Sri Naganathaswamy Temple - Thirunageswaram
http://www.thiruvidaimarudur.com/


Hindu Devotional Blog: Naganathaswamy Temple, Thirunageswaram
http://www.hindudevotionalblog.com/2009/07/naganathaswamy-temple-thirunageswaram.html

Puja at Thirunageswaram Temple (Rahu Sthalam) | Puja for ..
http://www.saranam.com/temple/24/thirunageswaram-temple-rahu-sthalam

Thirunageswaram - Wikipedia, the free encyclopedia
 http://en.wikipedia.org/wiki/Thirunageswaram


rahukala parihara puja - Ask Agent Ask Agent™ : Ask questions
http://www.ammas.com/ar/home.cfm?r=va&bid=1519&topicid=941&tid=124132

Thirunageswaram - Saranathan
 http://pulivahanan.wetpaint.com/page/Thirunageswaram

Sri Oppiliappan Temple – Thirunageswaram's Links
 http://www.socialpulse.com/Sri_Oppiliappan_Temple_Thirunageswaram/links

இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

20.10.10

அருள்மிகு குறுங்காலீஸ்வரர்(குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில் கோயம்பேடு சென்னை

  அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள், லவன், குசன் என்னும் 2 மகன்களை பெற்றெடுத்தாள்.  ராமர் தனது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர்.

     இந்நேரத்தில் ராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற லவகுசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும் ராமபிரான் மீது கோபமடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர்.

அப்போது ஒரு யாகக் குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப்போட்டனர். குதிரையுடன் வந்த சத்ருக்கன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத்தேடி ராமனும் அங்கு வந்தார். இதையறிந்த வால்மீகி லவகுசர்களிடம், ராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களது அன்னையே சீதை என்பதையும், எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமபிரான் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கி கூறினார். இருப்பினும், தந்தையை எதிர்த்தால் லவகுசருக்கு பித்ரு தோஷம் பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம் நீங்கப்பெற்றனர்.

குறுங்காலீஸ்வரர்: முற்காலத்தில் இத்தலத்து சிவலிங்கம், மணலால் மூடப்பட்டது. சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு "குறுங்காலீஸ்வரர்' என்ற பெயர் உண்டானது. "குசலவம்' என்றால் "குள்ளம்' என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருப்பதால், அம்பிகைக்கு மவுசு அதிகம். அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள்.

சூரியபகவான் சிறப்பு: அம்பாள் சன்னதிக்கு முன்புறம் உள்ள நவக்கிரக சன்னதி தாமரைபீடத்தின் மீது அமைந்துள்ளது. நடுவில் சூரியன், உஷா, பிரத்யுஷாவுடன் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரின் மீது நிற்கிறார். தேரோட்டியான அருணன் ஏழு குதிரைகளையும் பிடித்தபடி, சாரதியாக இருக்கிறார். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சூரியன், தனது தேரில் பயணிக்கும் நாளைக் கணக்கில் வைத்தே ஒவ்வொரு வருடமும் கணக்கிடப்படுகிறது. புத்தாண்டு மற்றும் பொங்கல் பிறக்கும் வேளையில் சூரியபகவானை ரதத்தின் மீது, அதுவும் மனைவியருடன் இந்த கோலத்தில் தரிசனம் செய்வது விசேஷம். சித்திரை மாதம் ரதசப்தமியின் போதும் இவருக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, ரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம்.

சிறப்பம்சம்: இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப் பணம் செய்யலாம். கோபுரத் திற்கு கீழே கபால பைரவர், வீரபத்திரர் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக் கிறது. லவகுசர்கள் "கோ' எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, "அயம்' என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் "கோயம் பேடு' என பெயர் பெற்றது. "பேடு' என்றால் "வேலி' எனப் பொருள். அருணகிரியார் இத்தலத்து முருகனைத் திருப்புகழில் பாடும் போது "கோசைநகர்' என்று குறிப்பிட்டுள்ளார்
  .
மூலவர்- குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர்,அம்மன் தர்மசம்வர்த்தினி,தீர்த்தம்    - குசலவ தீர்த்தம்,
 திருவிழா:      மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ரதசப்தமி    
திறக்கும் நேரம்:     காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:     அருள்மிகு குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில் , கோயம்பேடு- சென்னை.600107.
மேலும் கோயம்பேடு  சம்பந்தப்பட்ட சில வெப்சைடுகளின் குறிப்புகள் கீழே
veg price wholesale rate சந்தை நிலவரம் கோயம்பேடு மார்கெட் விலை பட்டியல் காய்கறி சந்தை நிலவரம்
chennai online news vegetable price in chennai koyambedu market
கோயம்பேடு காய்கறி விலை நிலவரம்
சென்னை புறநகர் பேருந்து நிலையம் (கோயம்பேடு) Chennai Mofussil Bus Terminus (CMBT) (Chennai) Main Bus stand of Chennai at Koyembedu. It is ASIA'S Largest Bus Terminus
கோயம்பேடு மார்க்கெட் அவலம்
http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=12389&id1=9

கோயம்பேடு காய்கறி விலை - Hughpages.com
http://hotnews.hughpages.com/tell_67725_id_7565.php

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1182:q----------&catid=36:2007

கோயம்பேடு பேருந்து நிலையம் – அரசின் கவனத்திற்கு
http://nilathuli.wordpress.com/2010/06/23/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/

கோயம்பேடு மார்க்கெட் ரூ.100 கோடி வியாபாரம்
http://www.dinamalar.com/News_Detail.asp?id=108713
  "சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!''— புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம் 
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1182:q----------&catid=36:2007
பஸ் டிரைவர் மீது தாக்குதல்: கோயம்பேட்டில் வாகனங்கள் ஸ்தம்பிப்பு
http://dhinamalar.info/News_Detail.asp?Id=78888&Print=1
குப்பைகளால் நாற்றமெடுக்கும் கோயம்பேடு பொதுமக்கள் வணிகர்கள் தினமும் தவிப்பு
http://article.wn.com/view/WNAT16a3e97f72fd0acf27f248fc78c6f00c/
kpn1049@yahoo.in

இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf