மூலவர்: நாகேஸ்வரர், நாகநாதர், உற்சவர்:அம்மன்/தாயார்: பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி) , தல விருட்சம்:செண்பகம், தீர்த்தம்:சூரியதீர்த்தம் புராண பெயர்: திருநாகேச்சுரம், ஊர்:திருநாகேஸ்வரம்-612204 மாவட்டம்:தஞ்சாவூர், மாநிலம்:தமிழ்நாடு.காலை 6 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
சுசீலர் என்ற முனிவருக்கு சுகர்மன் என்ற மகன் இருந்தான். இநத சுகர்மன் வனத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது நாக அரசனான தக்ககன் (ராகு) என்ற பாம்பு தீண்டியது. இதனால் தன் மகனை தீண்டிய தக்ககன்(ராகு பாம்பு) மானிடனாக பிறக்கும்படி அந்த முனிவர் சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டார். பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் சாபம் போகும் என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன் சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர் பெற்றார். அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இன்னொரு சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் காட்சி தருகின்றனர். பிருங்கி முனிவருக்கு முத்தேவியரும் இப்படி காட்சி தந்தனர். மார்கழி மாதத்தில் இந்த மூன்று அம்பிகைக்களுக்கும் புனுகு சாத்துகின்றனர். அந்த சமயத்தில் 45 நாட்கள் இந்த அம்பிகைகளை தரிசிக்க முடியாது. இந்த 45 நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்பு இருக்கும் திரைச்சீலைக்கே பூஜை செய்கிறார்கள். தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன் மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கிறார்கள். இங்கு வந்து இந்த மூன்றுதேவியரை
வணங்கி, வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது காலகாலமாக இருந்து வரும் நம்பிக்கை.
ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. . பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால் இந்த கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கினால் நல்ல யோகம், பதவி,பதவிஉயர்வு, தொழில், தொழில் மேண்மை வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை நீக்கம், நோய் நீக்கம், கடன் நீக்கம், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை தருவார். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்கு வந்து இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது.நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். பால் அபிஷேகத்தின்போது, பால் நீல நிறத்தில் மாறும் அதிசயம் இங்கு காணலாம். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் இவருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரியின் போது ராகு பகவான் சிவனை
வழிபட்டு அருள்பெற்றாராம். இந்த அடிப்படையில் இப்போதும் சிவராத்திரியின் போது, இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம் உள்ளது. சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின்போது மட்டும் ராகு பகவான் உற்சவர் வீதியுலா போகிறார்.
ராகுபெயர்ச்சியின் போது பரிகார பூஜை செய்து கொள்ளலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் ராகுபகவான், யோகராகு என்ற பெயரிலும் இருக்கின்றனர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்புகின்றனர்.
ராகு கிரகம்: அதிதேவதை - பசு, பிரத்யதி தேவதை - நாகம், நிறம் - கருமை, வாகனம் - சிம்மம், தானியம் - உளுந்து, மலர் - மந்தாரை, ரத்தினம் - கோமேதகம், வஸ்திரம் - நீலம், நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம், நட்புவீடு:- மிதுனம்- கன்னி- துலாம் இம்மூன்றும், பகைவீடு - கடகம்- சிம்மம்,ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம்.
பிரதான வாயில் கிழக்கு கோபுரம் - ஐந்து நிலைகளையுடையது. நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது.
சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் போக வேண்டி ராகுபகவான் இந்ததலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டார்.அதனால இத்தலத்து இறைவன் "நாகநாதர்' எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. இந்த தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் பலன்களளையும் தருவது சிறப்பு.
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை. கார்த்திகையில் பிரம்மோற்ஸவம், ராகு பெயர்ச்சி. ஞாயிறு தோறும் மாலை 4.30-6 மணி ராகு காலத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை, பாலபிஷேகம் நடக்கும். இது தவிர பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் நடக்கிறது.
கும்பகோணத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ரயில்நிலையம்: திருநாகேஸ்வரம், கும்பகோணம் (6 கிமீ)
விமான நிலையம்: திருச்சிராப்பள்ளி (110 கிமீ)
சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்ததும் ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றறதும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது
திருநாகேஸ்வரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் உப்பிலியப்பன் கோவில் என்கிற திவ்யதேசம் ஸ்தலம் உள்ளது.
Navagraha Temples
Suriyanar Koil (sun)
Arulmigu SivaSuriya Narayana Swamy Temple,
Suriyanar Kovil - 612102
Tamil Nadu, South India.
Phone : 0435 - 2472349
Email : info@suriyanarkoil.com
Web Site : www.suriyanarkoil.com
Thingalur (chandran)
Arulmighu Kailasanathaswamy Temple,
Thingalure - 613204,
Thiruvaiyaru Taluk, Thanjavur District,
Tamil Nadu, South India.
Thirunageswaram (raaghu)
Arulmighu Naganathaswamy Temple,
Tirunageswaram - 612204, Kumbakonam Taluk,Thanjavur District,
Tamil Nadu, South India.
Phone: 0435-2463354
Email : sriraaghutemple@sancharnet.in
Web Site : www.thirunageswaramraghu.org
Alangudi (Guru)
Sri Abadhsahayeshwara Swamy Temple,
Alangudi - 61280, Valangaiman Taluk, Thiruvarur District,
Tamil Nadu, South India.
Phone : 04374-269407
Email : algguru@sancharnet.in
Web Site : www.alangudigurubaghavan.com
Thirunallar (sani)
Sri Tharpaneeswarar Temple,
Thirunallar Post, Karaikal,
Pondicherry , South India.
Phone : 04368 - 236504
Email : algguru@sancharnet.in
Web Site : www.alangudigurubaghavan.com
Kezhperumballam (kethu)
Arulmighu Naganathaswamy Temple,
Keela Perumpallam - 609105,
Tharangampadi Taluk, Nagai District,
Tamil Nadu, South India.
Thiruvengadu (budhan)
Arulmigu Suveedharaneswarar Swamy Temple,
Thiruvengodu - 609 114,
Sirkali Taluk, Nagai District,
Tamil Nadu, South India.
Phone : 04364 - 256424
Vaitheswaran koil (sevvai)
Arulmigu Vaithiyanatha Swamy Temple,
Vaitheswaran Kovil Post,
Serkali Taluk, Nagai District
Tamil Nadu, South India.
Phone : 04364 - 279423
Kanjanur (velli)
Arulmigu Agneeswarar Temple,
Kanjanur Post, Thiruvidaimaruthur Taluk, Thanjavur District,
Tamil Nadu, South India.
Phone : 0435 - 2473737
related websites
Raghu Temple- Thirunageswaram -Online Pooja Booking Raghu - Thirunageshwaram- Navagraha Temples
http://kumbakonamtemple.wordpress.com/2009/07/27/raghu-peyarchi-thirunageswaram-21st-august-2009online-pooja-booking/
Thirunageswaram (Rahu)
, Navagraha Sthalas
http://www.mustseeindia.com/Navagraha-Sthalas-Thirunageswaram-%28Rahu%29/attraction/14139
Sri Naganatha Swamy ,Thirunageswaram
http://shanmughavadivu-temple.blogspot.com/2008/06/6.html
Sri Naganathaswamy Temple - Thirunageswaram
http://www.thiruvidaimarudur.com/
Hindu Devotional Blog: Naganathaswamy Temple, Thirunageswaram
http://www.hindudevotionalblog.com/2009/07/naganathaswamy-temple-thirunageswaram.html
Puja at Thirunageswaram Temple (Rahu Sthalam) | Puja for ..
http://www.saranam.com/temple/24/thirunageswaram-temple-rahu-sthalam
Thirunageswaram - Wikipedia, the free encyclopedia
http://en.wikipedia.org/wiki/Thirunageswaram
rahukala parihara puja - Ask Agent Ask Agent™ : Ask questions
http://www.ammas.com/ar/home.cfm?r=va&bid=1519&topicid=941&tid=124132
Thirunageswaram - Saranathan
http://pulivahanan.wetpaint.com/page/Thirunageswaram
Sri Oppiliappan Temple – Thirunageswaram's Links
http://www.socialpulse.com/Sri_Oppiliappan_Temple_Thirunageswaram/links
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments:
Post a Comment