3.8.10

மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன..

மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன..
அழகர் மலை அழகா…இந்த சிலை அழகா…என்று
மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன..

நவரசமும்ம் …….

முகத்தில் நவரசமும்..
மலர்திருக்கும் முகத்தில் நவரசமும்…
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும்..கண்டு

(மறைந்திருந்து பார்க்கும் …)

எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்…
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்..
பாவை என் பதம் காண நாணமோ….
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா…
தூயனே வேலவா…மாயனே சண்முகா

(மறைந்திருந்து பார்க்கும் …)

நாதத்திலே தலைவன் குரல் கேட்டேன்…
அந்த நாதத்திலே என்னை நான் மறந்தேன்…
மோகத்திலே என்னை மூழ்க வைத்து..(2)
ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்…
தூயனே வேலவா…மாயனே சண்முகா ,….எனையாளும் சண்முகா வா….

(மறைந்திருந்து பார்க்கும் …)

மான் ஆட மலை யாட..நதியாடா…
மங்கை இவள் நடனமாட….

கண் ஆட..மண் ஆட .ஒளியாட..இடையாட….
செல்வி இவள் கைகள் ஆட….

தூயனே வேலவா…மாயனே சண்முகா ,….எனையாளும் சண்முகா வா….

(மறைந்திருந்து பார்க்கும்…)

பாடல்: மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசீலா

No comments: