3.9.10

நாவிற்கு கசப்பானது. உடலுக்கோ இனிப்பானது. சர்கரை நோயாளிகளுக்கு அருமருந்தானது. பாகற்காயின் மருத்துவக் குணங்கள்

கல்லுரலின் காவலன் என்ற சிறப்பு பெயர் பெற்ற பாகற்காயின் மருத்துவக் குணங்கள்
           நாவிற்கு கசப்பானது. உடலுக்கோ இனிப்பானது. சர்கரை நோயாளிகளுக்கு அருமருந்தானது. வயிற்றிலிருக்கும் புழு பூச்சிகளுக்கோ எமனானது. இத்தனை சிறப்புடையது பாகற்காய் ( பாவக்காய் ) . இது சூடு உண்டாக்கும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும். பசியை உண்டாக்கும். பித்தத்தை குறைக்கும். மலம் இளைக்கும். பெண்களுக்கு பால் சுரக்கும். ஜரம், இருமல், மூலம் வியாதிகளை குணப்படுத்தும். இன்சுலின் நிறைந்தது பாகற்காய். இது ரத்தம் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது என்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே சொல்கிறார். பாகற்காயின் பலமே கசப்புதான். கசப்பை குறைக்க வேண்டுமானால் அதன் முள் போன்ற பகுதியை சீவி விட்டு சமைக்கலாம்.. கசப்பான பாகற்காய்தான் நீண்ட ஆயுளை தரும். பாகற்காய் ஜூஸ் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை போகும். 3லிருந்து 8வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீ ஸ்பூன் பாகற்காய் ஜூஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராது.

 100 கிராம் பாகற்காயில் இருக்கும் சத்துக்கள்:-  கலோரி 25, கால்சியம் 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6ம், கொழுப்பு 0.2ம், இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8ம், பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8ம், கார்போஹைட்ரேட் 4.2ம், சிறிதளவு விட்டமின் சி.

இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: