சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியின் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் குப்பைகளை அகற்றுதல், பழுதடைந்த சாலைகளைச் செப்பனிடுதல், மின் விநியோகக் குறைபாடுகளைச் சரிசெய்தல் போன்ற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இங்குள்ள பூக்கடைகள் தவிர, காய்கறி மற்றும் கனி விற்பனையாகும் கடைகளுக்கு மாதம்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப் படுகிறது. இன்று முதல் இது, நடைமுறைக்கு வருகிறது. இதனால் காய்கறி மற்றும் கனி விற்பனையகங்களின் அனைத்து நுழைவு வாயில்களும் மாதம்தோறும் கடைசி வியாழக்கிழமை இரவு 10 முதல் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.ஆனால் கொய்யாபழ வியாரிகள் சங்கம் தொடுத்த வழக்கின் காரனமாக கோர்ட் இடைகால தடை விதித்துள்ளது முழு விபரம் கீழே
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf
No comments:
Post a Comment