கோயம்பேடு பஸ்நிலையம் இப்பொழுது இட நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பஸ்நிலையத்திலிருந்து பஸ்ஸை வெளியே எடுக்க மிகவும் கால தாமதம் ஆகிறது. நேரம் வீணாகிறது என்று டிரைவர்கள் புலம்புகின்றனர்.சில நேரங்களில் ஒரு மணிநேரம் ஆகிறது என்று சொல்கிறார்கள். தரமான நிர்வாகத்துக்கு isi தரசான்று பெற்றது நமது கோயம்பேடு பஸ் நிலையம். இது ஆசியாவிலேயே மிகப்பெரியதும்கூட. 6ரேக்குகளில் 270 பஸ்களை ஒரே நேரத்தில் நிறுத்தமுடியும். 2000ம் பஸ்களை கையாளக்கூடிய இடவசதியும் உள்ளது. பிறமாவட்டத்தின் பல்வேறு போக்குவரத்துக் கழக பஸ்களும் பிற மாநிலத்தின் பஸகளும் இங்கு வந்து செல்கின்றன். இப்பொழுது பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரேக்குகளில் பஸ்கள் செல்வதை முறைப்படுத்தாது போன்ற பல காரணங்களாலும் இப்போது கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இரவுநேரங்களில் போகவேண்டிய பஸ்களும் காலையிலேயே ரேக்குகளில் நிறுத்தப்படுகிறது. ரேக்குகளில் நிறுத்தப்படும் பஸ்களுக்கு எதிரிலும் பின்னாலும் ஒழுங்கில்லாமலும் பல இடங்களிலும் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. 1,2,3,4 ஆகிய ரேக்குகளில் இந்த நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது.
சிக்கலான வழித்தடங்களை முறையாக பிரிப்பது, குறைந்த பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ள 5,6 ரேக்குகளில் மற்ற பஸ்களை நிறுத்த அனுமதிப்பது,அந்ததந்த நேரங்களில் செல்ல வேண்டிய பஸ்ஸை மட்டும் ரேக்குகளில் நிறுத்த அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் இட நெரிசலை சமாளிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இரவு செல்ல வேண்டிய பஸ்களை பகலில் பஸ் நிலையதுக்குள்ளேயே இருக்கும் பணிமனையில் நிறுத்தினாலும் இப்பிரக்கனையை ஓரளவு தீர்கமுடியும் என்று சொல்லப்படுகிறது.
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments:
Post a Comment